சென்னை:

லங்காநல்லூர், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவித்த மதுரை உயர்நீதி மன்றம் அது தொடர்பான வழக்குகளை முடித்து வைத்தது.

புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தும் குழுவில் தங்களை யும் சேர்க்க வேண்டும் என்று மற்றொரு தரப்பினர் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து வழக்கு நீதி மன்றம் சென்றது.

மேலும்,  அனைத்து சமூகத்தினரையும் சேர்ந்த விழா குழுவை அமைத்து ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். ஒரே ஜாதி ஆதிக்கம் இருக்க கூடாது மொத்தம் 14 வழக்குகள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதி மன்றம், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தும் குழுவில், அனைத்து சமூகத்தினரும் இடம்பெறும் வகையில் ஜல்லிக்கட்டுகுழு அமைக்க மாவட்ட ஆட்சியருக்கு  உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து அனைத்து தரப்பினரும் பங்கு பெறும் வகையில் குழு அமைக் கப்பட்டதாக மதுரை ஆட்சியர் பட்டியல் தாக்கல் செய்ததை தொடர்ந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடந்த 20 பேர் கொண்ட குழுவுக்கு உத்தரவிட்டு, ஜனவரி 15ம் தேதி திட்டமிட்டபடி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று உத்தரவிட்டது. மேலும்,  குழுவில் இடம் பெற்றுள்ள யாருக்கும் முதல் மரியாதை தரக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதுபோல  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு குழுவில் மேலும் 11பேர் சேர்க்கப்பட்ட னர். இதன் காரணமாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்குழுவினர் எண்ணிக்கை 35 ஆக  உயர்த்தப்பட்டுள்ளது.