
த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே, ஜெயராம், தபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அலா வைகுந்தபுரம்லோ’.
‘அலா வைகுந்தபுரம்லோ’ படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
பூஷன் குமார், கிருஷ்ணன் குமார், ராதா கிருஷ்ணா, அமன் கில் மற்றும் அல்லு அரவிந்த் ஆகியோர் தயாரிக்கப் படத்தின் பணிகள் தொடங்கப்பட்டன. இதனை ரோஹித் தவான் இயக்கி வருகிறார்.
இன்று (அக்டோபர் 13) முதல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ‘ஷெஸாடா’ என்று இப்படத்துக்குத் தலைப்பிடப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜுன் கதாபாத்திரத்தில் கார்த்திக் ஆர்யன், பூஜா ஹெக்டே கதாபாத்திரத்தில் கீர்த்தி சனோன் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் ப்ரேஷ் ராவல், மனிஷா கொய்ராலா உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
[youtube-feed feed=1]Gear up for a family action-packed musical, #Shehzada. In cinemas 4th November 2022.
Directed by #RohitDhawan.@TheAaryanKartik @kritisanon @ipritamoffical @SirPareshRawal @mkoirala @RonitBoseRoy @SachinSKhedkar #AnkurRathee. pic.twitter.com/2IbtMs1PbQ— Geetha Arts (@GeethaArts) October 13, 2021