டெல்லி: சிவன் கோயிலை இடித்து அஜ்மீர் தர்கா கட்டி இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில், மத்தியஅரசு, தொல்பொருள் ஆய்வுத் துறை உள்பட பல்வேறு அமைப்புகள் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
புகழ்பெற்ற அஜ்மீர் தர்கா ஷெரீப்பை ஆய்வு செய்யக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகம், இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) மற்றும் அஜ்மீர் தர்கா கமிட்டிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது காஜா மொய்னுதீன் சிஷ்தி தர்கா. இந்த தர்காவுக்கு நாடு முழுவதிலும் இருந்து முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர். தர்கா இருந்த இடத்தில் சங்கட் மோர்ச்சன் மஹாதேவ் எனும் சிவன் கோயில் இருந்ததாகப் பல ஆண்டுகளாகப் புகார் உள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் ஆட்சியின்போது கடந்த 2022-ம் தேதி காங்கிரஸ் முதல்வராக இருந்த அசோக் கெலாட்டிடம் இந்து அமைப்புகள் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதன்மீது மாநில அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதைத்தொடர்ந்து, மகாரானா பிரதாப் சேனா எனும் அமைப்பு உள்பட இந்து அமைப்புகள், அஜ்மீர் நீதிமன்றத்தில் வழக்காக தாக்கல் செய்துள்ளது. மனுவில், அஜ்மீர் தர்காவை ‘சங்கட் மோகன் மகாதேவ் கோயில்’ என்று அறிவிக்க வேண்டும் என்றும், அந்த இடத்தில் “இந்து வழிபாட்டை மீட்டெடுக்க வேண்டும்” என்றும் கோரினார்.
மனுவை அஜ்மீர் சிவில் செஷன்ஸ் நீதிமன்ற மூத்த நீதிபதி மன்மோகன் சண்டேல் விசாரித்தார். விசாரணையின்போது, மனுதாரர் வழக்கறிஞர் யோகேஷ் சிரோஜா 13ஆம் நூற்றாண்டு சூஃபி துறவியின் மீது வெள்ளை பளிங்கு ஆலயம் கட்டப்படுவதற்கு முன்பு அங்கு ஒரு சிவன் கோயில் இருந்ததற்கான “வரலாற்று ஆதாரங்களை” மேற்கோள் காட்டி மேலும். அஜ்மீரைச் சேர்ந்த நீதிபதியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஹர் பிலாஸ் சர்தாவின் (1867-1955) புத்தகத்தைப் பற்றி குறிப்பிட்டனர். குப்தா 1910 ஆம் ஆண்டு வெளியீட்டில், “தர்காவிற்கு அடியில் ஒரு இந்து கோவில் இருப்பதைப் பற்றி எழுதினார்” என்று குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து, இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், இதுதொடர்பாக தர்கா நிர்வாகக் குழு, ராஜஸ்தான் மாநில சிறுபான்மைத் துறை மற்றும் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையினர் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த விசாரணை டிசம்பர் 5-ம் தேதி மீண்டும் நடைபெற உள்ளது.
இதற்கிடையில், கடந்த 1910-ல் அஜ்மீர்வாசியான நீதிபதி ராம் விலாஸ் ஷர்தா என்பவர் ஒரு நூலை எழுதி வெளியிட்டுள்ளார். அதில், சிவன் கோயில் இருந்த இடத்தை இடித்து காஜா மொய்னுதீன் சிஷ்தி தர்கா கட்டியதாகக் குறிப்புகள் உள்ளன. இந்நூலை ஆதாரமாக கொண்டு விஷ்ணு குப்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இதில் கோயிலின் சில கலை பொருட்கள் தர்காவில் உள்ள பகுதிகளும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், மத்திய அரசின் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991-ன் கீழ் இந்த கள ஆய்வு வராது என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.