
அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த ‘விவேகம்’ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இதன் காரணமாக அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இதுவரை 50லட்சத்திற்கும் மேற்பட்டோர் விவேகம் டிரைவரை பார்த்து சாதனை படைத்துள்ளனர்.
‘வீரம்’, ‘வேதாளம்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் சிவா ‘தல’ அஜித்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ‘விவேகம்’. அஜித் ரசிகர்கள் வெகு நாள்களாக எதிர்பார்த்து காத்திருந்த ‘விவேகம்’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் அஜித்துடன், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘சர்வைவா’ மற்றும் ‘தலை விடுதலை’ பாடல்கள் யூடியூப் தளங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. . இந்நிலையில், ‘விவேகம்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
இந்த டிரெய்லர் இணையத்தில் அதிகம்பேரால் பார்க்கப்பட்டு, பகிரப்பட்டு வருகிறுது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்த படம் வருகிற 24-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
[youtube https://www.youtube.com/watch?v=yJdHR8nCYWk]
[youtube-feed feed=1]