அஜீத் நடித்து சமீபத்தில் வெளியாகி உள்ள விவேகம் படத்தின் கதை தன்னுடையது என்று தாயரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன் என்பவர் குமுறலுடன் தெரிவித்துள்ளார்.
அஜித் நடிப்பில் சிவா இயக்கியிருக்கும் ‘விவேகம்’ திரைப்டம் சமீபத்தில் வெளியானது. இப்படம் பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் சமூகவலைதளங்களில் பலராம் பதியப்படுகின்றன. அப்படி பதிபவர்களை அஜித் ரசிகர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் தரம்தாழ்ந்து விமர்சித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன் என்பவர் ‘விவேகம்’ கதை தன்னுடையது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“நான் ’ஐ-நா’ என்ற பெயரில் திரைப்படத்துக்கான கதையை தயார் செய்து வருகிறேன். அந்த ஐநா.வின் அடிப்படைக் கதைதான் ’விவேகம்’ படத்தின் கதை.
என் படம் 2013ல் எழுதப்பட்டது. இந்த கதையை அஜித் குமாரின் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் கூறினேன். திரைக்கதை வடிவத்தையும் அளித்தேன். அஜித்தை சந்திக்க வைக்கிறேன் என்று அவர் மூன்று வாரம் எடுத்துக் கொண்டார். பிறகு அஜித் புதுமுக இயக்குநருடன் கதையில் நடிக்க மாட்டார் என்று என்னிடம் சொல்லிவிட்டார்.
சமீபத்தில் வெளியான ’விவேகம்’ படத்தை பார்த்த போது நான் சொன்னதில் 60 சதவீதம் திரையில் இருந்தது. திரைக்கதையிலும் சில பல ஒற்றுமைகள் இருந்தன.
ஆனால் இதற்கும், இயக்குநர் சிவா மற்றும் அஜித்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நான் உறுதியாகக் கூறுகிறேன்.
ஏனெனில் அவர்கள் இருவரையும் நான் இதுவரை சந்திக்கவில்லை. ஆகவே இந்தக் கதையை திருடியது அஜித்குமாரின் நெருங்கிய நண்பர்தான். அவர் அப்போது என்னை அலையவிட்டு, ’விவேகம்’ படம் பார்க்கும்போது அழவும்விட்டுவிட்டார்.
படம் ஆரம்பிக்கும் முன்னர் படத்தில் வரும் சம்பவங்கள் கற்பனையே என்ற எழுத்துகள் வரும். நம்பமுடியவில்லை.
நான் எனது கதையை பல ஆராய்ச்சிக்குப் பின், நிஜ சம்பவங்களின் அடிப்படையில் எழுதியிருந்தேன். அதை அஜித்துக்கு ஏற்றவாறு எழுதியிருந்தேன். ’ஐ-நா’ படத்துக்கான முன் தயாரிப்பு வேலைகளுக்கே ஒன்றரை வருடங்கள் ஆகும்.
நான் எனது கதையை பல பெரிய தொழில்நுட்பக் கலைஞர்களிடம் சொல்லியிருக்கிறேன். அவர்கள் விவேகம் படத்தைப் பார்த்து என்னைக் கூப்பிட்டு இந்த அறிவுத் திருட்டைப் பற்றி வருந்தினார்கள்.