சென்னை: நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு, வரும் 24ந்தேதி வெளியாக உள்ளது. இதுதொடர்பான போஸ்டர்கள் சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் உள்பட தமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. இது அஜித் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதை ரசிகர்கள் சமுக வலைதளங்களில் பதிவிட்டு அதகளப்படுத்தி வருகின்றனர்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூரின் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள வலிமை திரைப்படம் வருகிற பிப்ரவரி 24ஆம் தேதி நாடு முழுவதும் திரைக்கு வரவிருக்கிறது. 3 மொழிகளில் இந்தபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழி களில் வெளியாகிறது.
அடுத்த வாரம் வியாழக்கிழமை, அதாவது பிப்ரவரி 24, 2022 அன்று (வியாழன்) திரையரங்குகளில் வெளியாக உள்ள அஜித்தின் ‘வலிமை’ வெளியீட்டை விளம்படுத்து வதில் தயாரிப்பாளர் மெனக்கெட்டு வருகிறார். தமிழகம் முழுவதும், பேருந்து நிறுத்தங்கள், ரயில் பாதைகள் மற்றும் மெட்ரோ ரயிலின் உள்பகுதிகள் என அனைத்து போக்குவரத்து நிலையங்களும் போஸ்டர்ஸ் , ஹோர்டிங்குகள் மற்றும் எல்.ஈ.டி காட்சிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மதுரை ரயில் நிலையத்திலும் வலிமை விளம்பர போஸ்டர்கள் வைக்கப்பட்டு, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. தியேட்டர்களிலும் சிலைடுகள் போடப்பட்டு வருகின்றன. இதை காணும் அஜித் ரசிகர்கள் புளங்காகிதம் அடைந்துள்ளனர். படத்தை ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக வலிமை படம் தயாரிப்பதிலும், வெளியிடுவதிலும் சிக்கல் நீடித்து வந்த நிலையில், சுமார் 3 வருடங்களுக்கு பிறகு வெளி யாக உள்ள வலிமை படத்தை காண ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
தமிழ்நாடு அரசும், திரையரங்குகளில் 100 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வலிமைப்படும் வெளியிடப்படும் பிப்ரவரி 24ந்தேதி அன்று சிறப்பு காட்சியா அதிகாலை 4 மணிக்கே முதல் காட்சி ஒளிபரப்பாகவிருக்கிறது.