‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து, மீண்டும் அஜித் – ஹெச்.வினோத் கூட்டணி இணையவுள்ளது. இதையும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து போனி கபூரே தயாரிக்கவுள்ளார்.

இதில் காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார் அஜித்.இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விமான நிலையத்துக்கு அஜித் வந்த போது ரசிகர்கள் அவரோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.