அஜித் நடித்த குட் பேட் அக்லி படம் திரையிடப்பட்ட தியேட்டரின் மேற்கூரையில் தொங்கவிடப்பட்டிருந்த ராட்சத அலங்கார மின்விளக்கு அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதால் படம் பாதியில் நிறுத்தப்பட்டது.
அஜித், த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியானது.
இப்படம் தமிழகத்தில் முதல் நாளில் ரூ.30.9 கோடி வசூலித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அஜித் படங்களின் வரிசையில் அதிக வசூல் செய்த படமாக மாறியுள்ளது.
இந்த நிலையில் இன்று சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் சுமார் 30 நிமிடம் நிறுத்தப்பட்டுள்ளது.
படம் திரையிடப்பட்டிருக்கும் போது மேல் பகுதியில் இருந்த அலங்கார மின் விளக்கு (‘Mirror Ball Light’) கீழே விழுந்துள்ளது. அது ஒரு குழந்தையின் தலையில் விழுந்ததால் அக்குழந்தை வலியால் துடித்ததுடன் அதிர்ச்சியில் அலறித்துடித்துள்ளது.
இதையடுத்து அந்த குழந்தையின் குடும்பத்தினர் திரையரங்க நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து திரைப்படம் திறப்படுவது சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
சம்பவம் குறித்து தகவலறிந்த குரோம்பேட்டை காவல்துறையினர் இதுகுறித்து இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தி சமாதானம் செய்துவைத்ததை அடுத்து திரைப்படம் மீண்டும் திரையிடப்பட்டது.
ஏற்கனவே, இரண்டு நாட்களுக்கு முன் திருநெல்வேலியில் அஜித் கட் அவுட் சரிந்து விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து தற்போது திரையரங்கின் மேற்கூரையில் இருந்த மின்விளக்கு ரசிகர் மீது விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.