கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு, 6 பதக்கங்களை வென்று அசத்தினார் அஜித்.

அடுத்ததாக டெல்லியில் நடக்கும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க உள்ளார் அஜித்.

இந்நிலையில், பயிற்சியின் இடையில் கிடைத்த ஓய்வு நேரத்தில் நடிகர் அஜித், தாஜ்மஹாலை சுற்றி பார்க்க சென்றுள்ளார். அவரை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள், அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். தாஜ்மஹாலில் அஜித்துடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

 

[youtube-feed feed=1]