அஜித் நடித்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் நல்ல வசூலை ஏற்படுத்தி வருகிறது.
படம் வெளியாகி நேற்றுடன் நான்கு நாட்கள் முடிந்த நிலையில், முதல் நாள் ரூ.29.25 கோடியும், 2வது நாள் ரூ. 15 கோடியும், 3வது நாள் 19.75 கோடியும் நேற்று ஞாயிற்றுக்கிழமை நான்காவது நாளில் ரூ. 21.10 கோடி என மொத்தம் 85.10 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
இந்த ஆண்டு வெளியான படங்களில் வசூலில் இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில் ரூ. 102.46 கோடி வசூலுடன் முதலிடத்தில் உள்ள டிராகன் பட வசூலை மிஞ்சி முதலிடத்தை பிடிக்க இன்னும் 17 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்ய வேண்டியுள்ளதால் அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ இந்த ஆண்டு பாக்ஸ் ஆபீசில் முதலிடத்தை பிடிப்பது உறுதியென்று கூறப்படுகிறது.
விடாமுயற்சி ஏற்படுத்திய மொத்த வசூலை நான்கே நாளில் ஏற்படுத்தி இதுவரை அஜித் நடித்த படங்களில் அதிக வசூலை பெற்ற திரைப்படமாக ‘குட் பேட் அக்லி’ மாறியுள்ளது.
முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களை மட்டுமே மனதில் வைத்து எடுக்கப்பட்ட மசாலா… சாரி… பேண்டஸி திரைப்படமான இந்தப் படத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையில் ஏகப்பட்ட ரீ-மிக்ஸ் இல்லை ரெட்ரோ… இல்லை இல்லை… வின்டேஜ் பாடல்களின் மேஷ்-அப் இடம்பெற்றுள்ளது.
அஜித் படங்களின் பெயர்களுடன் இடம்பெற்றுள்ள பஞ்ச் டயலாக் மற்றும் ரீ-கிரியேட் என ரசிகர்கள் மற்றும் இளைஞர்களின் பல்ஸ் பார்த்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் அடுத்து வரும் வாரத்திலும் குறிப்பிடும்படியான வசூலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.