அஜித் நடித்து வரும் AK61 படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நடந்து முடிந்தது.
இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் கடந்த மாதம் பைக் பயணம் மேற்கொண்ட நடிகர் அஜித் குமார் தற்போது இமயமலையில் பைக் பயணம் செய்து வருகிறார்.
கடந்த வாரம் அங்குள்ள புத்த மத ஆலயத்தில் அஜித் வழிபாடு செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.
தொடர்ந்து அவரது பைக் பயண வழித்தடம் உள்ளிட்ட படங்கள் அஜித் தரப்பில் இருந்து வெளியானது.
— Suresh Chandra (@SureshChandraa) September 15, 2022
இதனைத் தொடர்ந்து நேற்று வெளியான வீடியோ ஒன்றில், அஜித்தை தேடி வந்த ரசிகர் ஒருவர், “உங்களை மூன்று நாட்களாக இந்த பகுதியில் நாங்கள் தேடிக் கொண்டிருந்தோம்” என்று கூற,
Check the full video of Ajith sir with fans, tomorrow at 6am.
Here Link: https://t.co/Qa77zDwxJe
| #Ak #Ajith #AjithKumar | #Ak61 | pic.twitter.com/iTbeTlhbec
— Ajith | Dark Devil (@ajithFC) September 16, 2022
அதற்கு அஜித், “தேடினீர்களா ? நான் என்ன கொலைகாரனா ? இல்லை கொள்ளைக்காரனா ?” என்று கிண்டலாக சிரித்தபடியே கேட்டுவிட்டு சிறிது நேரம் அந்த ரசிகர்களுடன் பேசினார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.