துபாய்: கார் ரேஸ் போட்டிகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித், அது முடியும் வரை படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தப்போவது இல்லை என்றும், எந்தவொரு படத்திலும் நடிக்க கையெழுத்திட மாட்டேன் என முடிவு எடுத்துள்ளதாக அறிவித்து உள்ளார். அதன்படி, அடுத்த 9 மாதங்களுக்கு நடிகர் அஜித் எந்தவொரு படங்களிலும் நடிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.
நடிப்பைபோலவே , பைக் மற்றும் கார் ரேசிங்கிலும் அதீத ஆர்வமிக்கவர் அஜித் குமார் . இதனால் காரணமாக பல்வேறு விபத்துக்களில் சிக்கி, உடல் முழுவதும் பல்வேறு அறுவை சிகிச்சைசள் செய்து, மீண்டும் பல்வேறு படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில், அவருக்கு மீண்டும் ரேசில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் படங்களில் நடிப்பதற்கு சில காலம் ஒய்வு அளித்து விட்டு, கார் ரேசில் ஈடுபட்டு வருகிறார். நடிப்பைப் போலவே ரேசிங்கிலும் அவர் மிகப் பெரிய உச்சத்தை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது துபாயில் நடைபெற்று வரும், உலக புகழ் பெற்ற 24 ஹவர்ஸ் துபாய் கார் ரேஸ் பந்தயத்தில் அவர் கலந்துக் கொண்டிருக்கின்றார். மிஷ்லின் 24 ஹவர்ஸ் துபாய் (Michelin 24H Dubai) கார் ரேஸ் பந்தயத்தில் அஜித்குமார் அவரது அஜித் குமார் ரேசிங் குழு சார்பில் கலந்து வருகின்றார். இந்த போட்டிக்கான தகுதி சுற்றே ஜனவரி 10) நடைபெற்றது. இந்த போட்டியில் நடிகர் அஜித் குமார் பங்கேற்ற நிலையில், முதல் சுற்றில் அவரது கார் விபத்துக்குள்ளான நிலையில், மீண்டும் தகுதிச்சுற்றில் பங்கேற்று ஏழாவது இடத்தைப் பிடித்திருக்கின்றார். அதாவது, 2.03.476 நிமிடங்கள் என்கிற கால இடைவெளியில் இலக்கை அடைந்தே அவர் இந்த இடத்திற்கு முன்னேறி உள்ளார். இது அவரது ரசிகர்களையும் குஷியில் ஆழ்த்தி உள்ளது.
இந்த ரேஸ் பந்தயம் மட்டுமின்றி விரைவில் இன்னும் பல கார் பந்தயங்களில் அவர் கலந்துக் கொள்ள இருப்பதாக அறிவித்திருக்கின்றார். அந்தவகையில், ஆசிய ஃபார்முலா பிஎம்டபிள்யூ சாம்பியன்ஷிப், பிரிட்டிஷ் ஃபார்முலா 3 சாம்பியன்ஷிப் மற்றும் எஃப்ஐஏ ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் ஆகிய போட்டிகளிலும் அவர் கலந்துக் கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த போட்டிகள் முடிவடையும் வரை அஜித் சினிமாவிற்கு வர மாட்டார் என கூறப்படுகின்றது.
இந்த போட்டிகள் அனைத்தும் முடிவடைய சுமார் 9 மாதங்கள் வரை ஆகும் என கூறப்படுகின்றது. அதை அஜித்குமார் நடிக்க மாட்டார் என அவரே தெரிவித்திருக்கின்றார். இதன் வாயிலாக இப்போது அஜித்திற்கு நடிப்பைவிட கார் ரேஸ் மீது அதிகம் ஆர்வம் ஏற்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கின்றது. இது அஜித்தின் அடுத்த படத்திற்கான அப்டேட்டை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துஉள்ளது. இருந்தாலும், அஜித் நடித்திருக்கும் விடா முயற்சி திரைப்படம் எப்போது வெளியாகும் என அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், 24 ஹவர்ஸ் துபாய் போட்டியின் முக்கிய தொடர்கள் இன்று (11 ஜனவரி) தொடங்க இருக்கின்றன. அதாவது, இன்று இரவு 12.00 மணிக்கு அது தொடங்க உள்ளது. அஜித்தின் படங்களைக் காண காத்திருந்ததைப் போல அஜித்தின் இந்த கார் பந்தயத்தைக் காணவும் அவருடைய ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அஜித், “கார் பந்தய தொடர் முடிவடையும் வரை எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என தெரிவித்துஉள்ளார். மேலும், தான் 18 வயதில் ரேஸிங் தொடங்கினேன், அதன் பின் சினிமாவில் நடித்து வந்ததால் பங்கேற்கவில்லை. 2010ஆம் ஆண்டு EUROPEAN-2 இல் களமிறங்கினேன்; பின்னர் பங்கேற்க முடியவில்லை. தற்போது ரேஸிங் தொடருக்கு ஒரு உரிமையாளராகவும் வந்துள்ளேன். ரேசிங் பயிற்சியில் ஈடுபட்டாலும், தொடர்ந்து படங்களில் நடிப்பேன்.
2025 மார்ச் மாதத்திற்கு பிறகு தீவிரமாக ரேசிங்கில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தவர், வரும், மார்ச் மாதம் வரை சினிமா ஷூட்டிங்கில் பங்கேற்பேன். கடந்த ஆண்டு நடைபெற்ற 2004 பார்முலா 3 போட்டியில் என்னால் முழுமையாக பங்கேற்க முடியவில்லை ஏன் என்றால் அப்போது நான் இரண்டு படகுகளை ஓட்டிக்கொண்டிருந்தேன். அதில் ஒன்று சினிமா, மற்றொன்று ரேஸிங்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்த கார் பந்தயங்கள், வரும் செம்டம்பர் மாதம் வரை நடைபெற உள்ளதால், அதுவரை சுமார் 9 மாதங்கள், அஜித் எந்தவொரு படங்களிலும் நடிக்க மாட்டார் என தெரிகிறது.