சென்னை

ஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் பொங்களுக்கு வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா நடித்துள்ள விடாமுயற்சி படத்தில் இவர்களுடன் ரெஜினா, அர்ஜுன், ஆரவ், நிகில் நாயர், தசரதி மற்றும் கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் எனத் தகவல் வெளியானது.

அ இந்த படத்திற்கான டீசர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. மொத்த படப்பிடிப்பும் முடிந்ததாக கூறி அஜித்திற்கு மகிழ் திருமேனி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்திருந்தார்.

தற்போது விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளிப்போவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

லைகா நிறுவனம் வெளியிடப்பட்டுள்ளா அறிவிப்பில்,

“அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். சில தவிர்க்க முடியாத காரணங்களால் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து பிற்போடப்பட்டுள்ளது. மேலும் இந்த புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.