‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 60-வது படமாக உருவாகி வரும் இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர்.

வெகுநாள் காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது. இதற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்ததையொட்டி, புதிய போஸ்டரை வலிமை தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தில் பைக் ரேஸ் இடம்பெறுகிறது. பர்ஸ்ட் லுக்கில் அஜித் பைக்கில் அமர்ந்திருக்கும் படம் வெளியானது. தற்போது அதே பைக்கில் அஜித் சாலையில் செல்லும் படம் வெளியாகியுள்ளது. சிக்கிம் பகுதிக்கு அஜித் பைக்கில் சென்ற போது எடுத்த புகைப்படங்கள் இவை. வலிமை சண்டைக் காட்சியில் பைக் சாகஸம் முக்கிய இடம்பிடித்துள்ளதாக படக்குழு தெரிவிக்கிறது.

[youtube-feed feed=1]