நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்ஸி நடிகையாக நடிக்கும் புதிய படத்துக்கு ‘டிரைவர் ஜமுனா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

‘வத்திக்குச்சி’ படத்தின் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கவுள்ள அந்தப் படத்தை 18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக, பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி தயாரிப்பாளருமான எஸ்.பி.செளத்ரி தயாரிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளில் உருவாகும் இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். கிரைம் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது.

 

[youtube-feed feed=1]