ஜினி மகள் ஐஸ்வர்யா, ஐ.நா.வில் நடந்த “மகளிர்தின” விழாவில் பரத நாட்டியம்  (!) ஆடியதாக செய்திகள் வெளியாகின. அது நாட்டியமே இல்லை என்றுறும்  ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், “ஐஸ்வர்யா ஆடியது ஐ.நா.சபையில் அல்ல” என்று ஒரு தகவல் வெளியாகி  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இப்படிச் சொல்வோர் கூறும் விளக்கம் இதுதான்:

“அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ளது ஐ.நா. மன்றம். இந்த கட்டிடத்தின் வளாகத்தில் அனுமதி பெற்று யார் வேண்டுமானாலும் நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ளலாம்.  அப்படி இந்திய தூதரகம் தனிப்பட்ட முறையில் அனுமதி பெற்று மகளிர்தின விழாவை நடத்தியது. அதில்தான் ரஜினி மகள் ஐஸ்வர்யா ஆடினார்.

இதற்கும் ஐ.நா.வுக்கும் தொடர்பு கிடையாது.

ஐ.நா. சபையே அழைத்து நிகழ்ச்சி நடத்தினால் அதன்  அரங்கில் (ஜென்ரல் அசெம்பிளி) நடக்கும்  அப்படித்தான் எம்.எஸ். சுப்புலட்சுமி, சுதாரகுநாதன் போன்றவர்களை அழைத்து நிகழ்ச்சி நடத்தி ஐ.நா. கவுரவித்தது.

ஆனால் ஐஸ்வர்யா நிகழ்ச்சி அப்படிப்பட்டது அல்ல!” என்பதுதான் இந்தத் தகவல்.

# இது எப்படி இருக்கு?