சென்னை:
நாட்டில் சென்னை உள்ளிட்ட 8 முக்கிய நகரங்களில் இன்று ஏர்டெல் தனது 5ஜி சேவையை தொடங்கியுள்ளது.

இந்த 5ஜி சேவையை இன்று முதல் டெல்லி, மும்பை,சென்னை,பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாராணசி ஆகிய 8 நகரங்களில் ஏர்டெல் நிறுவனம் தொடங்கியுள்ளது.
மேலும், இந்த புதிய 5ஜி சேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் 4ஜி சேவைகளுக்கு செலுத்திய கட்டணத்தை செலுத்தியே பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.