டில்லி

ந்திய விமானத்துறை ஏர்போர்ட் உபயோகக் கட்டணங்களை குறைத்துள்ளதால் விமானப் பயணக் கட்டணங்கள் குறைந்துள்ளன.

இந்திய விமானத்துறை, டில்லை விமான நிலைய உபயோகக் கட்டணத்தை வெகுவாகக் குறைத்துள்ளது.   அதனால் டில்லியில் இருந்து செல்லும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானத்தில் பயணக் கட்டணங்கள் குறைந்துள்ளன.

உதாரணத்துக்கு,  டில்லி – மும்பை உள்நாட்டுப் பயணிகள் முன்பு விமான நிலைய உபயோகக் கட்டணமாக செலுத்தி வந்த ரூ.  578, வெறும் ரூ 10 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

டில்லி – நியூயார்க் பயணிகள் முன்பு செலுத்தியது ரூ, 1335.  தற்போது செலுத்த வேண்டியது ரூ. 45.

இது தவிர விமானங்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த பார்க்கிங் கட்டணமும் வெகுவாக குறைக்கப் பட்டுள்ளது.

இந்த கட்டணங்கள் குறைப்பினால் பயணிகளின் விமானக் கட்டணங்களும் குறைந்துள்ளன.

ஆனாலும் விமான நிறுவனங்களும், பயணிகளும், இது வரை வசூலிக்கப்பட்ட அதிகக் கட்டணங்களை டில்லி விமான நிலையம் திருப்பி அளிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.