லூதியானா

ஜி எஸ் டி வரிவிதிப்பு எதிரொலியால் துணிகளில் எம்பிராயட்ரி, சமிக்கி வேலைகள் செய்து அலங்கரிப்போர் 40000 பேர் வேலை இழப்பு

வட இந்தியர்களிடையே ஆடையில் சமிக்கி வைத்து தைத்துக் கொள்வதும்  எம்பிராயிடரியில் பல பூவேலைகள் செய்து அணிந்துக் கொள்வதும் பிரபலமான ஒன்று.  வட இந்திய நகரங்களில் ஒன்றான லூதியானாவில் மட்டும் சுமார் 40000 பேர் இதை கைவேலையாக செய்து அதன் மூலம் வாழ்ந்து வருகிறார்கள்.

தற்போது ஜி எஸ் டி வரி விதிப்பின் படி இந்த தொழில் நடத்துவோர்  பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.   முன்பு இவை குடிசை தொழிலாக கருதப்பட்டதால் பதிவுக்கு அவசியம் இல்லாமல் இருந்தது.   இப்போது அவைகளுக்கு துணியின் மதிப்புக் கூட்டல் என்னும் பிரிவில் வந்துள்ளது.   சாதாரண சிறு தொழில் செய்வோருக்கு பதிய முடியாததால் இவர்களில் யாருக்கும் இந்த துணி மில்லும் வேலை அளிப்பதில்லை.   அனைவரும் தற்போது வேலை இல்லாமல் அமர்ந்திருக்கிறார்கள்.

துணி மில் முதலாளிகள், “ இது போல் குறும் தொழிலாளர்கள் ஜி எஸ் டி யில் பதிவு செய்யவில்லை எனில் அவர்களால் ஜி எஸ் டி வாங்க முடியாது.  எங்களாலும் அந்த மதிப்பு கூடுதல் செலவுக்கான வரியை எங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து திரும்பப் பெற முடியாது.  அரசு இதனை மீண்டும் குடிசைத் தொழிலாக அறிவித்தால் இந்தத் தொழிலும், தொழிலாளர்களும் பிழைக்க முடியும்” என தெரிவித்துள்ளனர்.

அரசு ஆவன செய்து தங்களின் வாழ்வாதாரத்தை காக்கும் என பாதிக்கப்பட்ட தொழிலாளர்களும் காத்திருக்கின்றனர்.