எமிரேட்ஸ் கைவிட்டால் ஏ380 ரக விமானத்துக்கு ஏர்பஸ் குட்பை

Must read

பாரிஸ்:

ரோப்பாவின் சர்வதேச அடையாளமாக விளங்கும் ஏர்பஸ் ரக விமானமான ஏ380 தயாரிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் சேவை தொடங்கப்பட்ட 10 ஆண்டுகளிலேயே இந்த விமானம் சரிவை சந்தித்துள்ளது.

இந்த விமானம் மீண்டும் புத்துயிர் பெற ஒரே ஒரு வாய்ப்பு தான் உள்ளது. அது எமிரேட்ஸ் ஒப்பந்தம் தான். எமிரேட்ஸ் ஒப்பந்தம் வெற்றிகரமாக முடியாவிட்டால் ஏர்பஸ் விமான நிறுவனம் ஏ380 ரக விமான தயாரிப்பக்கு மூடுவிழா காண்பது நிச்சயமாகியிவிடும். இந்த ரக விமானத்தின் தேவை குறைந்தது தான் தயாரிப்பு நிறுத்தப்படுவதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எமிரேட்ஸ் ஒப்பந்தத்தில் எத்தனை பேர் பணியாற்றுகிறார்கள் என்ற கேள்விக்கு எமிரேட்ஸ், ஏர்பஸ் தரப்பில் பதில் இல்லை. எனினும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தற்போதைய விலையில் தயாரிப்பு செய்ய ஏர்பஸ்ஸூக்கு போதுமான ஆர்டர்கள் உள்ளது என்று ராய்டர்ஸ் ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.

ஏ380 ரக விமானம் 11 பில்லியன் ஈரோ மதிப்பில் தயாரிக்கப்பட்டு வருகிறது. போயிங் 747 விமானத்துக்கு சவால் விடும் வகையில் 500 பேர் பயணம் செய்யும் திறன் கொண்டது ஏ 380. நான்கு என்ஜின்களை    கொண்ட இந்த ரக விமானத்துக்கான தேவை குறைந்து, 2 என்ஜின்கள் கொண்ட விமானத்தின் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. இருக்கைகளை நிரப்பவும், பராமரிப்பு செலவும் குறைவு என்பதால் இந்த மாற்றம் ஏற்பட்டது.

எமிரேட்ஸ், ஏ380 ரக விமானங்களை முழுமையாக நம்புகிறது. இது வரை 140 விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்து 100 விமானங்களை வாங்கியுள்ளது. கடந்த மாதம் துபாயில் நடந்த விமான கண்காட்சியில் 16 பில்லியன் டாலர் மதிப்பிலான 36 சூப்பர் ஜம்போ விமானங்களுக்கான புதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முறிவு ஏற்பட்டது.

எனினும் பேச்சுவார்த்தை மீண்டும் நடக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்,   இதற்கான அறிகுறி இல்லை என்றே தோன்றுகிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஏர்பஸ் தொடர்ந்து விமான தயாரிப்பில் ஈடுபடும் என்ற உத்தரவாதத்தை எமிரேட்ஸ் எதிர்பார்க்கிறது.
மேலும், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் ஏ380 ரக விமானங்கள் மீது ஆர்வமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More articles

Latest article