கே.எம்.சர்ஜுன் இயக்கத்தில் கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் , சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவில் கே.எஸ்.சுந்தர மூர்த்தி இசையமைபில் . கதை மற்றும் திரைக்கதையை பிரியங்கா ரவீந்திரன் எழுதியுள்ள படம் ஐரா .
‘ஐரா’ என்பது, இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானையின் பெயரில் இருந்து எடுக்கப்பட்டது என இயக்குநர் சர்ஜுன் தெரிவித்துள்ளார் .
மார்ச் 28-ம் தேதி படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு சென்சார் போர்டு ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர்..
இந்நிலையில் ஒரு பேருந்தில், முன்பக்கக் கண்ணாடி தவிர மற்ற அனைத்து இடங்களிலும் ‘ஐரா’ படத்தின் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்தப் பேருந்து, தமிழகம் முழுவதும் இரண்டு வாரங்களுக்கு சுற்றிவர இருக்கிறது. இதனால், படத்தைப் பற்றி பெரும்பாலான மக்களுக்குச் சென்றுசேரும் என படக்குழுவினர் கருதுகின்றனர்.