இஸ்லாமாபாத்:
இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், நேற்று முதல் பாகிஸ்தானில் விமான சேவைகள் முடக்கப்பட்டது. அதுபோல பாகிஸ்தான் வான் வெளியில் விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
அதுபோல இந்தியாவிலும் நேற்று காலை சில விமான நிலையங்கள் மூடப்பட்ட நிலையில், பின்னர் பிற்பகல் முதல் அனைத்தும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வழக்கம்போல விமான சேவைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், பாகிஸ்தான் வான்வெளி பகுதியில் விமானங்கள் பறக்க விதிக்கப்பட்ட தடை தற்போதுவரை தொடர்ந்து வருகிறது. தடை நீக்கப்பட்டது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்டாத நிலையில், இன்று மதியம் மூன்று மணி முதல் பாகிஸ்தான் வான்வெளியில் சில பயணிகள் விமானங்கள் தென்படுகின்றன
ஏர் அராபியா, எமிரேட்ஸ், கத்தார் ஏர்வேஸ் நிறுவனங்களின் விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பயணிக்க ஆரம்பித்துள்ளன.
ஏர் அராபியாவின் விமானம் பெசாவிரிலிருந்து ரசூல் கைமா பகுதிக்கு பயணம் மேற்கொண்டுள்ளதை https://www.flightradar24.com காண முடிந்தது