சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் ஏர் டாக்ஸி சேவை நடைமுறைக்கு வர உள்ளது. முதற்கட்டமாக சென்னையில் Air Taxi சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்ககும் வகையில், ஏர் டாக்ஸி சேவைகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை சென்னை ஐஐடி நிறுவனத்தைச் சார்ந்த இபிளான் என்ற நிறுவனம் செய்து வருகிறது.

இந்தியாவில் மக்கள் பெருக்கம் மற்றும் வாகனங்கள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் சாலைகளில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்ள காரணமாக அமைகிறது. இதனால், மெட்ரோ ரயில், புல்லட் ரயில் என புதுப்புதுப் போக்குவரத்து வந்தாலும், போக்குவரத்து நெரிசலுக்கு முழுமையாக தீர்வு கிடைப்பது எட்டாக்கனியாகவே உள்ளது. சிறிய அளவு தூரத்தை கடப்பதற்கே சில மணி நேரம் காத்துக் கிடக்க வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக அவசர வேலைகளுக்கு புறப்பட்ட செல்லும்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கி குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது.
இதைத்தொடர்ந்து, ஏர் டாக்சி சேவைக்கு மத்தியஅரசு பச்சைக்கொடி காட்டி உள்ளது. உலக நாடுகளிடையே மின்சார ஏர் டாக்ஸிகள் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்தியாவிலும் மின்சார ஏர்டாக்கி சேவையை கொண்டு மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.. சுற்றுச்சூழல் அமைப்பின் வளர்ச்சி, ஒழுங்குமுறை ஒப்புதல்கள் மற்றும் செயல்பாட்டு வழித்தடங்களை நிறுவுதல் ஆகியவற்றைப் பொறுத்து, இத்தகைய சேவைகள் தொடங்க இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகலாம் என்று கூறப்பட்டது. அதன்படி, 2026ஆம் ஆண்டு முதல் டெல்லி, மும்பை மற்றும் புனே நகரங்களில் ஏர் டாக்சி சோதனையைத் தொடங்கும் கூறியதுடன், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் , செயல்முறை குறித்து ஆய்வு செய்து வந்ததுடன், விமானப் போக்குவரத்துடன் சீரான ஒருங்கிணைப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுத்துவருகிறது.
இது தொடர்பான ஆய்வுகள் இந்தியாவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்தியாவில் விரைவில் ஏர் டாக்ஸி சேவைகள் தொடங்கப்படும் என தெரியவந்துள்ளது. இதனால் இனி தேசிய நெடுஞ்சாலைகளாக வானம் மாற இருக்கிறது. 2028 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஏர் டாக்ஸி சேவை தொடங்க வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஏர் டாக்ஸிகள் மூலம் இனி நிமிடங்களில் பயணம் செய்து முடித்து விடலாம்.
இதற்காக பிரபல ஏர் டாக்சி நிறுவனங்களான ஆர்ச்சர் போன்ற நிறுவனங்கள் ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு உட்பட்டு, 2026-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் இத்தகைய சேவைகளை அறிமுகப்படுத்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. கூடுதலாக, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் VTOL விமானங்களுக்குச் சான்றளிப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது, இது இந்தத் துறையில் அற்புதமான முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கிறது.
ஏர் டாக்சி சேவைகளை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, கர்நாடகா, தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களில் தனியார் ஏர் டாக்சி சேவைகள் தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. பயணிகள் போக்குவரத்து , சரக்குகள் கையாளுதல் மற்றும் அவசர மருத்துவம் என மூன்று வகைகளில் ஏர் டாக்ஸி சேவை வழங்கப்பட இருக்கிறது.
இந்தியாவில் ஏர் டாக்ஸி சேவை முதற்கட்டமாக சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் தொடங்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் துரிதப்படுத்தப் பட்டுள்ளன. பெங்களூரைச் சேர்ந்த சார்லா ஏவியேஷன் என்ற நிறுவனம் ஏற்கனவே ஏர் டாக்ஸி சோதனைகளை தொடங்கி விட்டது.
2026 ஆம் ஆண்டில் டெல்லி, மும்பை மற்றும் புனே நகரங்களில் ஏர் டாக்ஸி சோதனைகளை தொடங்க இருப்பதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏர் டாக்ஸிக்களை பொறுத்த வரையில் அவை ஹெலிகாப்டர்கள் போல செங்குத்தாக மேலே எழும்பவும் தரையிறங்கவும் முடியும். இவை முற்றிலும் மின்சாரத்தில் இயங்குவதால் சத்தம் குறைவாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்கும். ஏர் டாக்ஸி போக்குவரத்திற்கான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தயாரித்து வருகிறது. இதற்கான கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஏர் டாக்சி சேவை எப்போது?
தமிழ்நாட்டில் ஏர் டாக்ஸி சேவைகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை சென்னை ஐஐடி நிறுவனத்தைச் சார்ந்த இபிளான் என்ற நிறுவனம் செய்து வருகிறது. சென்னையில் கடல் காற்று அதிகம் வீசும் என்பதால் கடலோர காற்று மற்றும் பருவ மழை காலங்களில் ஏர் டாக்ஸிகளை இயக்குவது தொடர்பான பாதுகாப்பு சோதனைகளும் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி முதற்கட்டமாக சென்னையில் 2026ஆம் ஆண்டின் பிற்பகுதி அல்லது 2027 ஆம் ஆண்டின் முற்பகுதிக்குள் சோதனை ஓட்டங்கள் நிறைவு பெற்று முதலில் சரக்கு போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஏர் டாக்ஸி சேவைகளை காண பொதுமக்கள் அதிகம் ஆர்வமாக காத்திருக்கின்றனர். அதை நிறைவேற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
2028ஆம் ஆண்டு வணிகரீதியான ஏர் டாக்ஸி சேவை சென்னையில் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் எனவும் அதைத்தொடர்ந்து பயணிகள் ஏர் டாக்ஸி சேவைகள் அறிமுகப்படுத்தும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சென்னையில் பெருமளவு வாகன நெரிசல் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
விமானங்கள் பயணிகளை ஏற்றி இறக்கி செல்லும், ஏர்போர்ட்டுகள் இருப்பது போல, ஏர் டாக்ஸிகள் சேவைகளை வழங்குவதற்காக வெர்டிபோர்ட்கள் சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட இருக்கின்றன. இந்த வெர்டிபோர்ட் பெரிய வணிக வளாகங்கள் அல்லது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மொட்டை மாடிகளில் ஹெலிபேட் போலவே சிறிய அளவில் இவை அமைக்கப்படும். அங்கேயே இங்கு ஏர் டேக்ஸிகளுக்கான சார்ஜிங் வசதிகளும் இடம்பெறும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், ஏர் டாக்சியில் பயணிக்கும் பயணிகளின் உடைமைகளை ஸ்கேன் செய்வதற்கான வசதிகள் மற்றும் சிறிய அளவிலான காத்திருப்பு அறை உள்ளிட்ட வசதிகளும் வெர்டிபோர்ட்களில் இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது.
சென்னையில் வெர்டிபோர்ட் அமைப்பதற்காக சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CMDA) மற்றும் இபிளான் நிறுவனம் சில இடங்களை பரிந்துரை செய்துள்ளன. அதன்படி சென்னை விமான நிலையம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம், சோழிங்கநல்லூர் சந்திப்பு, சிறுசேரி சிப்காட், தரமணி, நந்தனம், சென்ட்ரல், ஸ்ரீபெரும்பதூர், ஒரகடம் போன்ற பகுதிகளிலும் முக்கிய மருத்துவமனைகளிலும் வெர்டிபோர்ட் அமைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவில், ஏர்டாக்சி சேவையை, இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான இன்டெர்குளோப் என்டர்பிரைசஸ், அமெரிக்காவின் ஆர்செர் ஏவியேசனுடன் இணைந்து விரைவில் இந்தியாவில் வணிக ரீதியான ‘ஏர் டாக்ஸி’ சேவையை முடிவு செய்திருக்கிறது. அதானி குழுமம் இதற்கான கட்டமைப்பு மற்றும் முனையங்களை அமைப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ‘ஏர் டாக்ஸி’ முனையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.
[youtube-feed feed=1]