டில்லி: 

காற்று மாசு பிரச்சினையில் பாஜக ஆளும் யோகி ஆதித்யநாத்தின் உ.பி. முதலிடம் பிடித்துள்ளது. அங்கு லக்னோ இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

உலகம் முழுவதும் காற்று மாசு காரணமாக பல்வேறு பிரச்சினைகள், நோய்கள் பரவி வருகிறது. இதைத்தடுக்க உலகம் முழுவதும் மரங்களை நடுமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உலக அளவில் காற்று மாசு பாதிப்பு அதிகம் உள்ள நகரங்கள் குறித்து உலக சுகாதார அமைப்பு ஆய்வு நடத்தியது. அதில், இந்தியாவில் லக்னோ நகரம் முதலிடத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

உலக சுகாதார அமைப்பு (who) கடந்த 2016-ம் ஆண்டு முதல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை போன்றவற்றால் நகரங்களில் உருவாகி உள்ள  காற்று மாசு கண்காணித்து வருகிறது. இதன்படி உலகம் முழுவதும் 4200 நகரங்கள் காற்று மாசினால் அதிக அளவு பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவித்து உள்ளது.

இதில் இந்தியாவில் லக்னோ, பரிதாபாத், வாரணாசி, கயா, பாட்னா, டில்லி, ஆக்ரா, முசாபபூர், ஸ்ரீநகர், குர்கான், ஜோத்பூர், பாடியாலா, ஜோத்பூர் உள்ளிட்ட 13 பெரிய நகரங்கள் காற்று மாசினால் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.  உ.பி. மாநிலம் லக்னோ அதிக பாதிப்புடன் முதலிடத்தில் உள்ளதாக அறிவித்து உள்ளது.