சென்னை:
சென்னையில் காற்றின் மாசு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

நேற்று மாலை சென்னையில் காற்றில் நுண்துகள்களின் அளவு 109 என இருந்த நிலையில், இன்று மாலை 192 என்ற அளவாக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் தீபாவளி பண்டிகையையொட்டி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டியும் பட்டாசுகள் வெடித்ததால் புகை மூட்டமாக காணப்பட்டது.
இதனால், சென்னையில் காற்றின் தரம் பாதுகாப்பான நிலையில் இருந்து,மோசமான நிலைக்கு மாறியுள்ளதாகவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.
மேலும், மணலி, ராயபுரம், வேளச்சேரி பகுதிகளில் காற்றின் தரம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel