டெல்லி
மார்ச் மாதம் முதல் மீண்டும் இஸ்ரேலுக்கு ஏர் இந்தியா விமான சேவை தொடங்க உள்ளது.
தற்போது இஸ்ரேல்-காசா இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இந்த போர் காரணமாக இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் இந்தியா இடையிலான விமான சேவையை ‘ஏர் இந்தியா’ நிறுவனம் நிறுத்தி வைத்திருந்தது.
தற்போது போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதால் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இந்தியா-இஸ்ரேல் இடையே வரும் மார்ச் 2-ந்தேதி முதல் ‘ஏர் இந்தியா’ விமான சேவை தொடங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் இதனால் நிம்மதியடைந்துள்ளனர். மேலும் ஏர் பிரான்ஸ், லுப்தான்சா, பிரிட்டிஷ் ஏர்வேஸ், ரயானேர் உள்ளிட்ட விமான நிறுவனங்களும் இஸ்ரேலுக்கு மீண்டும் விமான சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளன.