பிரக்யராஜ்:
உ.பி. மாநிலத்தில் இந்த மாதம் கும்பமேலா நடைபெற உள்ளது. இதன் காரணமாக இப்போதே நாடு முழுவதும் உள்ள சாமியார்கள் உ.பி. மாநிலத்தில் குவியத் தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில், கும்பமேளாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு வசதியாக சிறப்பு விமானங் களை இயக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக மாநில அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

உ.பி. மாநிலத்தில் உள்ள பிரக்யராஜ் (அலகாபாத்) மாவட்டத்தில் கும்ப மேளா இந்த மாதம் 15 தொடங்கி மார்ச் 30ந்தேதி வரை நடைபெற உள்ளது. புனித ஸ்தலமான இங்கு கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கின்றன. இதன் காரணமாக இதற்கு திரிவேணி சங்கமும் என்ற பெயருண்டு. இங்கு புனித நீராடினால் நாம் செய்த பாவங்கள் தொலையும் என்பது ஐதிகம். இதன் காரணமாக இந்த புண்ணிய நதியில் நீராட உலகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் பிரக்யராஜ் நகரில் குவிவார்கள்.
இந்த துண்டு ஜனவரி முதல் மார்ச் வரை பிரயாக்ராஜ் நகரில் கும்ப மேளா நடைபெற உள்ளது. இந்த விழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவார்கள். இதனால் ஏற்படும் மக்கள் நெரிசலை சமாளிக்க மாநிலஅரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதன் ஒருபகுதியாக பிரயாக்ராஜ் நகரில் 3 மாதம் திருமணம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவனம், கும்பமேளாவுக்காக சிறப்பு விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது. இந்த விமான சேவைகள் ஜனவரி 13ந்தேதி முதல் மார்ச் 30ந்தேதி வரை இயக்கப்படும் என அறிவித்து உள்ளது.
டில்லி, கொல்கத்தாவில் இருந்து அலகாபாத்துக்கு 403 விமான சேவைகளை இயக்க முடிவு செய்துள்ளது. இந்த சேவைகள் டில்லியில் இருந்து திங்கள், புதன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் இயங்கும் என்றும் அறிவித்து உள்ளது.
அதுபோல கொல்கத்தாவில் இருந்து அலகாபாத் நகருக்கு புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும் என்றும் கூறி உள்ளது.
ஏற்கனவே உ.பி. மாநிலத்தில் யோகியின் நடவடிக்கை காரணமாக பாஜகவில் இருந்து பிரிந்து சென்ற முன்னாள் எம்எல்ஏ சாவித்ரிபாய் பூலே, மாநிலத்தில் கும்பமேளாக்கள் நடத்துவதாலும் கோயில்கள் கட்டுவதாலும் மட்டும் வளர்ச்சி ஏற்பட்டுவிடாது. கும்பமேளாவும் கோயிலுமா தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, முஸ்லிம் சிறுபான்மையின மக்களின் பசி தீர்க்கப்போகிறது. மக்களின் கவனத்தை திசை திருப்புவதே அரசின் குறிக்கோள். அதனால்தான் கும்பமேளாவுக்கு செலவழித்துக் கொண்டிருக்கிறது.வளர்ச்சிக்கு அரசியல் சாசன சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]