புதுடெல்லி:

இந்தியாவில் தொழுநோய் மீண்டும் பரவி வருவதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது.
இந்தியாவில் தாெழுநோயை ஒழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீவிரமாக அரசு களம் இறங்கினாலும் முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ள தொழுநோயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனினும் புதிதாக தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் விவரங்களை பதிவு செய்ய அரசு ஆர்வம் காட்டவில்லை.

இந்தியாவில் தொழுநோயை ஒழித்து விட்டதாக 13 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவத்துறையினர் கொண்டாடினர். இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் தொழுநோய் தடுப்புப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2017-ல் 1லட்சத்து 35 ஆயிரத்து 485 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அதாவது, 4 நிமிடத்துக்கு ஒருமுறை ஒருவர் தொழுநோய்க்கு சிகிச்சை பெறுகிறார். இந்தியாவிலிருந்து தொற்றுநோய் முற்றிலும் ஒழிக்கப்படும் என கடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார்.

 

இதற்காக மருத்துவத்துறையினர் களத்தில் இறங்கி பணியாற்றிவருவதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் தொழுநோய் மெதுவாக பரவி வருகிறது. கவுரவ குறைச்சல் காரணமாக இது குறித்த விவரத்தை பதிவு செய்ய அரசு தயங்குகிறது.

புறக்கணிக்கப்படும் நோயாளிகள்
பீகாரைச் சேர்ந்த ரச்னா குமாரி என்ற 21 வயது பெண்ணுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் தொழுநோயால் பாதிக்கப்பட்டதால், குடும்பத்தினரே அவரை வெளியேற்றிவிட்டனர். இதைனயடுத்துதொழுநோய்க்கு எதிரான சர்வதேச நிறுவனத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். தொழுநோயாளிகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணிக்க முடிவு செய்தார்.
இது குறித்து அவர் கூறும்போது, தொழுநோய் குறி்த்து பயப்படவேண்டிய அவசியம் இல்லை. நாம் இணைந்து பணியாற்றினால், போலியோவைப் போல தொழுநோயையும் ஒழிக்க முடியும் என்றார்.

இந்தியாவில் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட இவர்கள், 750-க்கும் மேற்பட்ட தனி குடியிருப்புகளில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.