டில்லி

ரசு நிறுவனமான ஏர் இந்தியா அமெரிக்காவுக்கு தர வேண்டிய மூன்று லட்சம் டாலரை நைஜீரியாவுக்கு செலுத்தி உள்ளது.

சைபர் கிரைமில் நைஜீரியா முதல் இடத்தில் உள்ளது.    ஆன்லைன் மோசடிகளில் பெரும்பாலான குற்றங்கள் நைஜீரியாவில் நடந்து வருகின்றன.   இது குறித்து இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.    ஆனால் இந்த விவகாரத்தில் இந்திய அரசு நிறுவமான ஏர் இந்தியா சிக்கி உள்ளது.

ஏர் இந்தியா அமெரிக்காவில் சான் ஃப்ரான்சிஸ்கோ, நியூயார்க் மற்றும் நெவார்க் நகரங்களுக்கு விமான சேவை நடத்தி வருகிறது.    உதிரி பாகங்கள் தேவையால் ஏர் இந்தியவின் பல விமானங்கள் பழுதில் உள்ளன.   இதனால் அந்த விமானங்கள் பறக்க இயலாத நிலையில் உள்ளன.    இந்த உதிரி பாகங்களை அமெரிக்காவில் உள்ள பிராட்ட் அண்ட் ஒயிட்னி நிறுவனம் அளிக்க உள்ளது.

இதற்கான தொகையான மூன்று லட்சம் அமெரிக்க டாலரை (சுமார் ரூ,. 2.1 கோடி) ஏர் இந்தியாவின் அமெரிக்க கிளை அலுவலகம் தவறுதலாக நைஜீரியாவில் உள்ள ஒரு நிறுவனத்தின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி உள்ளது.    இந்த தவறு கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்துள்ளது.    அந்த பணத்தை நைஜீரியா வங்கி கணக்கில் இருந்து திரும்பப் பெற பல முறை முயன்றும் இதுவரை அது கிடைக்கவில்லை.

தற்போது இரு வருடங்கள் கழித்து இது குறித்த விவரம் வெளியாகி உள்ளது.  இது குறித்து ஏர் இந்தியா மேலதிகாரி ஒருவர், “இந்த தவறை செய்த அதிகாரிகளுக்கு எவ்வித தண்டனையும் வழங்கப்படைவிலை.   இது குறித்து இன்னும் விசாரணை நடந்து வருகிறது.   இது ஒரு சைபர் கிரைம் ஆகும்.” என தெரிவித்துள்ளார்.