மும்பை:

மும்பையில் இருந்து அமெரிக்கா சென்ற ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு வைத்திருப்ப தாக வந்த தகவலை தொடர்ந்து அவசரமாக விமானம் லண்டனில் தரையிறக்கப்பட்டது.

மும்பை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் நெவார்க் நகருக்கு ஏர் இந்தியா ஏஐ 191 விமானம் புறப்பட்டு சென்றது. இந்த  விமானத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்த நிலையில்,  லண்டனில் அவசரமாக  தரையிறக்கப்பட்டது. உடடினயாக ஏர் இந்தியா விமானத்துக்கு  பிரிட்டனின் ராயல் ஏர் போர்ஸ் விமானங்கள் பாதுகாப்பு அளித்தன

ஏர் இந்தியா விமானம் இன்று காலை லண்டன் நேரப்படி 10.15 க்கு தரையிறக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் இறக்கப்பட்ட நிலையில், விமான த்தை, விமான நிலையத்தின்  ஓரமான பகுதிக்கு  கொண்டு செல்லப்பபட்டு தீவிர சோதனை நடைபெற்றதாகவும், அதில் எந்தவிதமான வெடி பொருட்களும் இல்லை என்பது ஊர்ஜிதப்படுத்திய  நிலையில், அது புரளி என தெரிய வந்ததாக லண்டன்  ஸ்டன்ஸ்டெட் விமான நிலையம் தெரிவித்து உள்ளது.

ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக புரளி எழுந்ததை தொடர்ந்து  விமான பயணிகள் பரபரப்பு அடைந்தனர். பின்னர் விமானம் மீண்டும் புறப்பட்டு சென்றது.