டெல்லி: கடும் நிதிச்சுமையில் தத்தளித்து வரும் ஏர் இந்தியாவின் பங்குகளை டாடாவின் விஸ்தாரா வாங்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

டாடாஸ் 1932ம் ஆண்டில் ஏர் இந்தியாவை நிறுவியது டாடா நிறுவனமாகும். பின்னர் ஏர் இந்தியா, 1953ல் தேசியமயமாக்கப்பட்டது. ஆனால், இப்போது அந்த நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கிறது.

இந்த நிலை தொடர்வதால், ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளை விற்கிறது மத்திய அரசு. கடனில் மூழ்கி வரும் ஏர் இந்தியாவை தனியார் மயமாக்கல் என்ற செயல்முறையை மத்திய அரசு அமலாக்க முயன்றுள்ளது.

இதையடுத்து, அதன் பங்குகளை விற்க முன் வந்திருக்கிறது. ஏர் இந்தியா பங்குகளை விற்பதற்கான அரசாங்கத்தின் 2வது முயற்சி இதுவாகும். 2018 ஆம் ஆண்டின் முதல் முயற்சியில், ஏர் இந்தியாவில் 76 சதவீதத்தை விற்பனைக்கு வைத்திருந்தது.

இந் நிலையில், அதை டாடா நிறுவனம் வாங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது வெளியாகி உள்ள தகவல்களின் படி டாடாவின் விஸ்தாரா ஏர் இந்தியாவை வாங்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஸ்தாரா என்பது டாடா மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்சுடனான கூட்டு நிறுவனமாகும். இந்த விஸ்தாரா, ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்கக் கூடும் என்று தெரிகிறது.

ஆனால் இந்த தகவல்களை டாடா நிறுவனம் மறுக்கவில்லை. மாறாக, இது தொடர்பான விபரங்களை இப்போது தான் பெற்றிருக்கிறோம். அவை அனைத்தையும் விரிவாக பரிசீலிக்க வேண்டி இருக்கிறது.

நிறுவனத்தின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு, ஏராளமான விஷயங்களை கலந்து ஆலோசிக்க வேண்டி உள்ளது என்று டாடா நிறுவனம் கூறி இருக்கிறது.