சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுவாக சென்னை அருகே நெருங்கி வருவதால்,  சென்னை உள்பட 6 மாவட்டங் களில் கனமழை கொட்டும் என இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது. அதன்படி,  சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

வடகிழக்கு பருவமழையையொட்டி, இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் மழை கொட்டி வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் நிரம்பி, விவசாயமும் செழித்து உள்ளது. கடந்த வாரம் பெய்த மழை சென்னை உள்பட டெல்டா மாவட்டங்களில் கடுமையான சேதத்தை உருவாக்கிய நிலையில், தற்போது மீண்டும் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

கடந்த 13 ஆம் தேதி தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இது இன்று இரவுக்குள்காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி சென்னையிலிருந்து 340 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து தென்கிழக்குத் திசையிலும், புதுச்சேரியில் இருந்து 300 கிலோ மீட்டர் கிழக்கு, தென்கிழக்கு திசையிலும் மையம் கொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. தற்போது கிழக்கு திசையில் தமிழகத்தை நோக்கி நகந்த நிலையல், தற்போது, தற்போது மேற்கு திசையை நோக்கி, அதாவது தெற்கு ஆந்திர கடலோர பகுதியை நோக்கி   நகர்கிறது.

இதனால் வட தமிழக கடலோர மாவட்டங்களில் அதிகன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பகுதிகளிலும் இன்று அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெறாது என்று நேற்று வரை கணிக்கப்பட்ட நிலையில் இன்று அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று உள்ளது. தெற்கு ஆந்திரா – வட தமிழக கடற்கரை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நகர்ந்து வருகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புதுச்சேரியில் இருந்து 300கிமீ கிழக்கு – தென் கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ளது என கூறப்பட்டு உள்ளது.

இந்த காற்றதழுத்த தாழ்வு பகுதி குறித்து தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள தகவலில்,

எதிர்பார்த்தபடி மன அழுத்தம் அதிகாரப்பூர்வ நிறுவனம் அறிவிப்பு. மீண்டும் ஒரு சென்னை நிலச்சரிவு. வெறும் 1 வாரத்தில் 2 வது ஒன்று. சென்னை அருகே மன அழுத்தம் வரும் வரை மழை தொடர வேண்டும், சென்னை அருகே வந்தவுடன் குறைகிறது.
பாண்டி-கடலூர்-திருவண்ணாமலை மண்டலத்தில் பாரிய பேண்ட்கள் வீழ்ச்சி. செங்கல்பட்டும் கட்சியில் சேர்ந்து வேலூருக்கு நீட்டிப்பு.
Depression என்பதால் அடுத்த சில மணி நேரங்களில் சென்னை தெற்கு திசையில் Depression வரை. மன அழுத்தம் நம் அண்மை நிலையை அடைந்தவுடன், காற்று மெதுவாக அடங்கும்.
115 mm க்கு நெருக்கமாக 115 mm உடன் பாண்டி ரேமேஜ் மோடில் காலை 8.30 மணிக்கு மேல் பதிவு. சென்னை காலை 8.30 மணிக்கு மேல் இதுவரை 30-40 மிமீ பதிவு செய்துள்ளது.

 

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது.