தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மதுரை:

துரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாவிட்டால் தனது அமைச்சர்  பதவியை ராஜினாமா செய்வேன் என்று தமிழக அரசுக்கு தமிழக  அமைச்சர் உதயகுமார் மிரட்டல் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடம் தொடர்பாக மத்திய மாநில அரசுகளுக்கு இடையே இழுபறி நீடித்து வருகிறது. எய்ம்ஸ் மருத்துவமனை தஞ்சாவூரில் அமைக்க ஒரு தரப்பினரும், மதுரையில் அமைக்க மற்றொரு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக அதற்கான இடம் இறுதி செய்யப்படாமல் உள்ளது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம் குறித்து மத்திய அரசு உடனே அறிவிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதி மன்ற கிளையில் பொதுநல  வழக்கு தொடரப்பட்டு, அதுவும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைய உள்ளது என்பது இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், மதுரையில் அமைக்க கோரி வலியுறுத்தி வரும், அமைச்சர் உதயக்குமார், தற்போது மீண்டும் அதை வலியுறுத்தி உள்ளார்.

இன்று மதுரையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட  தமிழக வருவாய்த்துறை  அமைச்சர் உதயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

ஏற்கனவே தெரிவித்த படி  மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமையாவிட்டால்  தனது பதவியை ராஜினாமா செய்வேன் என்று மத்திய மாநில அரசுக்கு  எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரை மற்றும் அதைச் சுற்றி உள்ள  18 மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைவது தான் சிறப்பாக இருக்கும் என்றும் வலியுறுத்தினார்.

 

மதுரை தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமையவில்லை என்றால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என்று ஏற்கனவே கூறிய எனது  நிலைப்பாட்டில் எந்தவித  மாற்றமும் இல்லை என்றும் கூறினார்.

மேலும், மதுரையில் பாஸ்போர் அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதுபோல திருமங்கலத்தில் வெளியூர் பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு ரூ. 3 கோடி மதிப்பீட்டில் நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியை வாங்கப்படும் என்றும் கூறினார்.