டில்லி

னி வரும் காலங்களில், யுஜிசி, ஏஐசிடிஇ ஆகியவை கலைக்கப்பட்டு புதிய கட்டுப்பாட்டு மையம் உருவாக்கப் படும் என பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது

கல்வி கட்டுப்பாடுகள் பன்முக மையமாக இருப்பதனால் ஏற்படும் இடர்களை சரி செய்ய ஒரே கட்டுப்பாட்டு மையம் ஒன்று உருவாக்கப்படும் என தெரிகிறது.

புதியதாக துவங்கப்படும் உயர்கல்வி கட்டுப்பாடு மையம் (HEERA – Higher education Empowerment Regulation Agency) முழுமை அடைந்த பின் யூஜிசி, ஏஐசிடிஇ ஆகியவை முழுமையாக கலைக்கப்படும்.

நிதி ஆயோக் மற்றும் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் இணைந்து இந்த மையத்தினை துவங்க திட்டமிட்டுள்ளது

மையம் அனைத்து உயர்கல்வி துறைகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்

இதற்கான வரைவுத்திட்டம் உருவாக்கும் பணி நடைபெறுகிறது.

மையத்தின் அதிகார வரம்பு அனைத்து கல்வித் திட்டங்களையும் கட்டுப்பாட்டில் கொண்டு வரும்

புதிய, சுருக்கமான தெளிவான விதிமுறைகள் உண்டாக்கப்படும்

தொழில் நுட்பம், மற்றும் தொழில் நுட்பம் இல்லாத கல்வி என பிரிப்பது இப்போது எந்த நாட்டிலும் இல்லை.

இரண்டும் ஒரே அமைப்பின் கிழ் இனி செயல்படும்.

நிதிநிலை அறிக்கையில் ஏற்கனவே யுஜிசியில் மாறுதல்கள் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது தெரிந்ததே..