திருவனந்தபுரம்,

மாட்டிறைச்சி தொடர்பான மத்திய அரசின் புதிய சட்டத்திற்கு தடை விதிக்க கேரள உயர்நீதி மன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.

இறைச்சி தொழில் பாதிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், கேரள ஐகோர்ட்டு, மத்திய அரசின் ஆணைக்கு தடை விதிக்க மறுத்துள்ளது.

மத்திய அரசின் அறிவிக்கையால் இறைச்சி தொழில் பாதிக்கப்படுகிறது என்பதில் நியாயம் உள்ளது என்று தெரிவித்த நீதிபதி, தடை பிறப்பிக்க மறுத்து,  வழக்கு தொடர்பான விரிவான விசாரணை ஆகஸ்ட் 26ம் தேதி நடைபெறும் என்று கூறி வழக்கை தள்ளி வைத்தார்.

ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கில், கடந்த மாதம் 31ந்தேதி கேரளா அரசு தடை விதிக்க மறுத்தது. அப்போது,   மத்திய அரசு அறிவிப்பாணையில் மாடுகளை வெட்டவோ, அதன் இறைச்சியை சாப்பிடவோ தடை ஏதும் விதிக்கவில்லை என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.