சென்னை: டிசம்பர் 12 ஆம் தேதி டெல்லியில் மத்திய பாஜக அரசுக்கு எதிரான நடைபெறுவதாக இருந்த காங்கிரஸ் கட்சியின் பிரமாண்ட பேரணி, ராஜஸ்தானுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்  கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.
மோடி தலைமையிலான மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கையால் நாடு முழுவதும் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதை கண்டித்தும்,   பணவீக்கத்தை எதிர்த்தும் காங்கிரஸ் சார்பில் டெல்லியில் வரும் டிசம்பர் 12ம் தேதி டெல்லி ராம்லுலா மைதானத்தில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் தலைமை அறிவித்திருந்தது. இந்த பேரணியில்  நாடு முழுவதும் இருந்து காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதை ஏற்று, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும், தமிழ்நாட்டில் இருந்து பேரணியில் கலந்துகொள்பவர்கள் குறித்த தகவலை கோரியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது டெல்லியில் பேரணி நடத்த அனுமதி கிடைக்காததால், அன்றைய தின பேரணி ராஜஸ்தான் மாநில தலைவர் ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
அதில்,   மத்திய பா.ஜ.க. ஆட்சியில் விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை கண்டிக்கின்ற வகையில் மாபெரும் பேரணியை வருகின்ற டிசம்பர் 12 ஆம் தேதி தலைநகர் தில்லியில் ராம்லீலா மைதானத்தில் நடத்துவதென ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்ததால் தற்போது பேரணி நடைபெறுகிற இடம் அதேநாளில் (டிசம்பர் 12) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு மாற்றப்பட்டுள்ளது.
எனவே, தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் பேரணியில் கலந்து கொள்வதற்கு 12 ஆம் தேதி ஜெய்ப்பூர் செல்ல அதற்குரிய ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.