சென்னை: அதிமுகவுக்கு முதன்முதலில் தேர்தல் வெற்றியைத் தேடித்தந்த மாயத்தேவர் காலமானார். வயது முதிர்வு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
1972ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திமுக விலிருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய பிறகு முதன்முறையாக திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலை சந்திக்க நேர்ந்தது. அந்த தேர்தலில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு அதிமுகவுக்கு முதன்முதலில் தேர்தல் வெற்றியைத் தேடித்தந்தவர் மாயத்தேவர். அவர் இன்று  காலமானார். அவருக்கு வயது 88.
மாயத்தேவர் மறைவுக்கு அதிமுக தலைவர்கள், அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1972ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திமுக விலிருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய பிறகு முதன்முறையாக திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலை சந்திக்க நேர்ந்தது. அப்போது கலைஞர் தலைமையில் திமுக ஆட்சி. இந்த சூழலில், 1973-ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
ஆளுங்கட்சியான திமுக சார்பில் பொன் முத்துராமலிங்கம் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் எம்ஜிஆர் தனது தீவிர ஆதரவாளரான மாயத்தேவரை களமிறக்கினார்.  இந்த தேர்தலில் மக்கள் அதிமுகவை ஒதுக்கி திமுகவுக்கு வெற்றிவாய்ப்பை வழங்குவார்கள் என மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மக்களின் மனநிலையே திமுகவுக்கு எதிராகவே இருந்தது, தேர்தல் முடிவில் வெளிப்பட்டது. மே 21ஆம் வாக்குகள் எண்ணப்பட்ட போது, திமுகவுக்கு கடுமை யான அதிர்ச்சியை கொடுத்தது. மாயத்தேவர் 1லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றார். அப்பேது ஆளும் கட்சியாக இருந்த திமுக  வேட்பாளர் பொன்முத்துராமலிங்கம் 93 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். ஆனால்,  எம்ஜிஆரின் வேட்பாளர் மாயத்தேவர்,  2 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகள் பெற்று எம்ஜிஆர் மக்கள் இதயத்தில் இதயக்கனியாக இருப்பதை  உறுதி செய்தார். இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பைஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
அதிமுக தமிழ்நாட்டில் நிலைத்து நிற்க முதல்படியாக இருந்தவர் மாயத்தேவர். இன்று  அதிமுகவும் அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கும் நிலையில், மாயத்தேவர் மறைந்துவிட்டார்.