சர்ச்சைக்குரிய பொதுப்பணித்தறை ஒப்பந்தக்காரர் சேகர் ரெட்டியிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியின் முக்கிய பக்கங்கள் என்று, தனியார் ஆங்கில தொலைக்காட்சி சேனலான டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டது.
அந்தப் பட்டியலில், எம்.சி.சம்பத், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் “சேகர் ரெட்டியிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியின் சில பக்கங்கள்” என்ற குறிப்புடன் சமூகவலைதளங்களில் அநாமதேயமாக ஒரு பட்டியல் வெளியானது.
அதில் பிரபல ஊடகவியலாளர்கலான, தந்தி தொலைக்காட்சி பாண்டே மற்றும் ஹரிஹரன், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் கார்த்திகைச் செல்வன், டைம்ஸ் நவ் சபீர் அகமது, நியூஸ்மினிட் இணையதளத்தின் தன்யா ராஜேந்திரன் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
இதுவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள், “சேகர் ரெட்டியிடம் லஞ்சம் வாங்கிய அமைச்சர்களின் பட்டியல் வெளியானதை அடுத்து, அதை திசைத்திருப்ப ஊடகவியலாளர்கள் சிலரது பெயருடன் பட்டியல் ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. அடையாளத்தை மறைத்துக்கொண்டிருக்கும் சிலர் போலியான இப்பட்டியலை சமூகவலைதளங்களில் பரப்புகிறார்கள். இதையும் நம்பும் அப்பாவிகள் இந்தப் பட்டியலை பகிர்ந்துவருகிறார்கள்.
சேகர் ரெட்டியிடம் பணம் வாங்கிய அ.தி.மு.க. அமைச்சர்களின் பட்டியல் வெளியானதை திசைத்திருப்பும் முயற்சியே இது” என்று தெரிவித்தனர்.
இது குறித்த செய்தியை பத்திரிகை டாட்காம் இதழில் வெளியிட்டிருந்தோம்.
இதை உறுதிப்படுத்தும் வகையில் அ.தி.மு.க. ஐ.டி. பிரிவைச் சேர்ந்த பிர
இந்த நிலையில், ; “சேகர் ரெட்டியின் டைரி வெளியானதால் ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். உள்ளிட்ட அமைச்சர்களுக்கு இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலை திசைத்திருப்பவே அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு, ஊடகவியலாளர்கள் பெயர்களுடன் போலி பட்டியலை தயாரித்து சமூகஊடகங்களில் பரப்பிவிட்டது” என்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
அ.தி.மு.க. ஐ.டி. விங் துணைச் செயலாளர் பிரசாத், “ஊடகவியலாளர்கள் பெயர்கள் குறிப்பிட்ட பட்டியல் போலியானது. அதை சமூகவலைதளத்தில் நான் பதிந்தது தவறு. அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் சபீர் அகமதுவை தொடர்புகொண்டு பேசினோம்.
அவரிடம், “அந்த போலி பட்டியலில் உங்களது பெயரும் இருந்தபோது எப்படி உணர்ந்தீர்கள்” என்றோம்.
“அதைப் பார்த்ததும் சிரிப்புதான் வந்தது” என்றவர் விரிவாக பேச ஆரம்பித்தார்:
“சர்ச்சைக்குரிய தொழிலதிபர் சேகர் ரெட்டியிடமிருந்து வருமானவரித்துறை அந்த முக்கிய டைரியைக் கைப்பற்றியது. சேகர் ரெட்டியிடம் பணம் வாங்கியதாக அமைச்சர்கள் உள்ளிட்ட பலரது பெயர்கள் அதில் இருந்தன. இந்த டைரியை வருமானவரித்துறை சுமார் ஏழு மாதங்களுக்கு முன் தமிழக அரசிடம் கொடுத்தது.
ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
இது குறித்து விசாரிக்கும்போதுதான் ஒரு சோர்ஸில் எங்களுக்கு (டைம்ஸ் நவ்) அந்த டைரியின் சில பக்கங்கள் கிடைத்தன. அதில் ஓ.பி.எஸ்ஸுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அமைச்சர்கள் சிலரது பெயருடன் வேறு பலர் பெயர்களும் இருந்தன.
இந்த டைரி விவகாரத்தை டைம்ஸ் நவ் வெளியிடப்போகிறது என்பது ஒ.பி.எஸ். உள்ளிட்ட பல அமைச்சர்களுக்கு முன்னதாகவே தெரியும்.
எப்படி என்றால், டைரி கிடைத்ததும் அது குறுத்து சம்பந்தப்பட்டவர்களின் கருத்தை அறிய முயன்றோம். ஆக, அப்போதே அவர்களுக்கு இது வெளியாகும் என்று தெரியும்.
நாங்கள் கேட்டபோது, ஓ.பி.எஸ். உள்ளிட்ட அமைச்சர்கள் கருத்து தெரிவிக்கவில்லை.
அந்த டைரி விவாரத்தை ஒளிபரப்பிய பிறகும் அவர்களைத்தொடர்புகொண்டோம். அப்போதும் அவர்கள் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
ஊடக்ததிடம் கருத்து தெரிவிப்பதும் மறுப்பதும் அவர்களது உரிமை.
அதே நேரம், இவ்வளவு பெரிய குற்றச்சாட்டு சுமத்தப்படும்போது, அது குறித்து அறிக்கையோ, ட்விட்டர் பதிவோ வெளியிட்டிருக்கலாம்.
ஆனால் இப்போது வரை அமைச்சர்கள் வாய்மூடி மவுனமாகவே இருக்கிறார்கள்.
இதற்கிடையே, டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் தங்களைப் பற்றிய சேகர் ரெட்டி டைரி குறித்து ஒளிபரப்பாகப்போகிறது என்பதை அறிந்தவுடனே, குறுக்கு வழியில் சிந்தித்திருக்கிறார்கள்.
அதன் விளைவுதான், ஊடகவியாளர்கள் சிலரது பெயருடன் வெளியான போலி பட்டியல்.
அமைச்சர்கள் இது குறித்து கருத்து சொல்லாவிட்டாலும், ஆளும் அ.தி.மு.க.வோ, அல்லது தமிழக அரசோ கருத்து சொல்லியிருக்க வேண்டும்.
ஆனால் அமைச்சர்கள் குறித்த உண்மையான லஞ்ச டைரி விவகாரத்தை மறைக்க பொய்யான பட்டியல் ஒன்றை அ.தி.மு.க. வெளியிடுகிறது. ஒரு அரசியல் கட்சி இப்படி பொய்யான பரப்புரை செய்வது இதுதான் முதல் முறை.
இதுவே கருணாநிதி அல்லது ஜெயலலிதா ஆட்சியில் நடந்திருந்தால் அவர்களது செயல்பாடு வேறு மாதிரி இருந்திருக்கும்.
கருணாநிதி ஆதங்கத்துடன் தனது கட்சி நாளேடான முரசொலியில் கட்டுரை தீட்டியிருப்பார். ஜெயலலிதாவாக இருந்தால், செய்தியின் உண்மைத்தன்மை பற்றி காவல்துறை மூலம் விசாரித்து அறிந்திருப்பார். விசயம் உண்மை எனில் சம்பந்தப்பட்ட அமைச்சரை பதவி நீக்கம் செய்திருப்பார்.
முத்துக்குமார் என்ற அரசு ஊழியர் தற்கொலையில், அப்போதைய அமைச்சர் அக்ர கிருஷ்ணமூர்த்திக்கு தொடர்பிருப்பது தெரிந்து அது குறித்த செய்திகள் ஊடகத்தில் வந்தன. இது குறித்து காவல்துறை மூலம் விசாரித்து அறிந்த ஜெயலலிதா, அந்தத் தகவல் உண்மை என்றதும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை பதவி நீக்கம் செய்தார். பிறகு அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைதும் செய்யப்பட்டார்.
இதுதான் கருணாநிதி, ஜெயலலிதா அணுகுமுறை.
ஆனால் தற்போதைய தலைமைக்கு, தலைமைப்பண்புகள் இல்லை. ஆகவேதான் போலி பட்டியல் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
ஓ.பி.எஸ்ஸுடனே இதர அமைச்சர்களுடனோ எனக்கு வாய்க்கா வரப்பு.. அவ்வளவு ஏன் கிணற்றுத் தகராறு கூட கிடையாது.
ஊடகத்தில் ஒரு செய்தி வெளியானால் அதற்கான விளக்கத்தை பொறுப்பில் இருப்பவர் கொடுப்பதுதான் முறை. இது போல போர்ஜரி தகவல்களை வெளியிடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்று சொல்லி முடித்தார் சபீர் அமது.