சென்னை:

டக விவாதங்களில் கட்சியினர் கலந்து கொள்ளக் கூடாது என உத்தரவிட்டஅதிமுக தலைமை தற்போது, தடையை விலக்கி உள்ளது. மேலும், ஜூலை 1ந்தேதி முதல் ஊடக விவாதங்களில் கலந்து கொள்ளலாம் என்றும் அறிவித்து உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் படுதோல்வியை தொடர்ந்து மதுரை எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, இரட்டை தலைமைக்கு எதிராக கருத்து கூறினார். இதன் காரணமாக அதிமுகவில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது. அதையடுத்து, அதிமுகவில் எழும் பிரச்னைகளை தடுக்க ஊடக விவாதங்களில் கட்சியினர் கலந்து கொள்ளக் கூடாது என அதிமுக தலைமை கடந்த 12ந்தேதி தடை விதித்தது.

இந்த நிலையில்,தற்போது தடை விலக்கப்பட்டு உள்ளதாக அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணைஒருங்கிணைப் பாளர் ஈபிஎஸ் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.

கழக செய்தி தொடர்பாளர்கள் அனைவரும் வருகின்ற 01-07-2019 திங்கட்கிழமை முதல் தங்களுடையே பணியினை தொடர்வார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அறிவித்து உள்ளனர்.