திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் 28-ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்! ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு..!

Must read

சென்னை: திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 28ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக அறிவித்துள்ளது.

“விடியல்” தரப்போவதாக தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக அரசே ! வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களை வஞ்சிக்காதே. தமிழ் நாட்டு வாக்காளர்களின் உள்ள குமுறல்களை உலகுக்கு உரக்க சொல்லி கழக உடன்பிறப்புகளின் உரிமை குரல் முழக்கம் செய்வார்கள் என இபிஎஸ், ஒபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்..

திமுக அரசு பொய் வழக்குப் போடும் அரசியல் ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளதை கண்டித்து, தமிழகம் முழுவதும் வரும் 28ஆம் தேதி அதாவது வரும் புதன்கிழமை திமுக அரசுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக எடப்பாடி பன்னீர்செல்வம்,  ஓ.பன்னீர்செல்வம் இருவரும் அறிவித்துள்ளனர்.

தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என ஓபிஎஸ், ஈபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளனர். நீட்தேர்வு, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு போன்றவற்றையும் நிறைவேற்றவில்லை. அதிமுகவை அழிக்கலாம், ஒழித்து விடலாம் என கனவு கண்டால் அது பகல் கனவாகவே முடியும் என ஓபிஎஸ், ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article