டில்லி:

நாடாளுமன்ற தேர்தலையொட்டி  பாஜக இன்றுதான் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது.   “சங்கல் பத்ரா” என்ற  பெயரில் வெளியிடப்பட்ட இன்றைய அறிக்கை, தமிழகத்தில் கூட்டணி கட்சி மற்றும் ஆட்சி செய்து வரும் அதிமுகவின் தேர்தல் அறிக்கைக்கு நேர் எதிராக உள்ளது. அதுபோல தமிழக நலன்களுக்கு எதிராகவே பல அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

இது பாஜக கூட்டணியில் இணைந்துள்ள அதிமுக மற்றும் பாமகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் தாக்கல் தேர்தலில் எதிரொலிக்கும் என நம்பப்படுகிறது.

அதிமுக  தேர்தலையொட்டி கடந்த 8ந்தேதி வெளியிட்ட  தேர்தல் அறிக்கையில்,  தமிழகத் தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,  தமிழ்மொழியை மத்திய அரசு அலுவலகங்களில் அலுவல்மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்  என்று தெரிவித்திருந்தது.

மேலும்,  மாணவர்களின் கல்வி கடன்களை முழுவதுமாக ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றும்,  கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தது.

ஆனால், இன்று வெளியிடப்பட்டுள்ள பாஜகவின் தேர்தல் அறிக்கையில்,  நீட் தேர்வு குறித்து எந்த விதமான அறிவிப்பும் இடம்பெறவில்லை. அதுபோல,  கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவது குறித்தும் எந்தவிதமான  தகவலும் இடம் பெறவில்லை.

ஆனால், தமிழகத்துக்கு எதிரான போக்கை மத்திய பாஜக  கடைபிடிக்கும் என்பதை  கோடிட்டு காட்டி உள்ளது.

தேர்தல் அறிக்கையில்,  சமஸ்கிருதத்தை பள்ளிகளில் கற்பிப்போம். சமஸ்கிருதத்தை மொழியை பிரபலப்படுத்துவோம்  என்று தெரிவித்து உள்ளது.

இது அதிமுக மட்டுமல்லாது பாஜக உள்பட தமிழக அரசியல் கட்சிகளிடையே கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவின் தேர்தல் அறிக்கை குறித்து அதிமுகவும், பாமகவும் என்ன எதிர்வினை ஆற்றப்போகிறார்கள் என்பது குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதுபோல, விவசாய நிலங்களை அழித்து தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்கு தமிழகம் முழுவதும் பொது மக்கள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே சென்னை சேலம் 8 வழி சாலை அமைக்க நிலம் கையப்படுத்தியது  தொடர்பான வழக்கில், நிலம் கையப்படுத்தும் தமிழக அரசின்  அரசாணையை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்துள்ளது.

தமிழகத்தின் நிலை இப்படி இருக்க, பாஜகவோ மேலும் தேசிய நெடுஞ்சாலைகளை அமைப்போம் என்று தேசிய நெடுஞ்சாலைகளை அமைப்போம் என்று அறிவித்துள்ளது.

பாஜகவின் அறிக்கையில்,  அடுத்த 5 ஆண்டுகளில் 60,000 கிலோமீட்டர் அளவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஏற்படுத்தப்படும் என்றும்,  தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 2022ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கப்படும என்றும் தெரிவித்துள்ள தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் மோடி, எடப்பாடி, பன்வாரிலால் (பைல் படம்)

அதுபோல தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை உடன் மருத்துவக்கல்லூரி  அமைக்கப்படும் என  அறிவித்து 5 ஆண்டுகள் முடியும் நிலையில், தேர்தலை மனதில் கொண்டு வாக்கு வங்கையை பைப்பற்றும் நோக்கில், கடந்த ஜனவரி மாதம் 27ந்தேதி  திடீரென  மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு  பிரதமர்  அடிக்கல் நாட்டினார். ஆனால், அதற்கான நிதி ஏதும் ஒதுக்கப்படாமல் கிடப்பில் உள்ளது.

இந்த நிலையில,  2022ஆம் ஆண்டுக்குள் 75 மருத்துவக் கல்லூரிகள் புதிதாக ஏற்படுத்தப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதும் கேள்விகளை எழுப்பி உள்ளது.

பாஜகவின் தேர்தல் அறிக்கையை மாநில நலனுக்கு எதிராகவும்,  பொய் புரட்டுகளில் மொத்த வடிவமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் உள்பட சில கட்சிகள் இணைந்துள்ளன. இந்த கட்சிகள் அனைத்தும் நீட் தேர்வுக்கு எதிரான கருத்துக்களையே மக்களிடம் முன்வைத்து வாக்குகளை சேகரித்து வருகிறது.

ஆனால், நீட் தேர்வு குறித்து எந்த வித கருத்தும் தெரிவிக்காத பாஜக சமஸ்கிருதத்தை திணிப்போம் என்பதை தேர்தல் அறிக்கையில் பகிரங்கமாக தெரிவித்துள்ளது கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பை உருவாக்கி உள்ளது.

தமிழக மக்கள் பாஜகவின் இந்த அறிவிப்பு குறித்து அதிமுக, பாமக கட்சிகளின் பதில் என்ன எதிர்பார்த்து  காத்துக்கொண்டிருக்கிறார்கள்.. பாஜகவின் இந்த அறிவிப்பு தமிழகத்தில், பாஜகவுக்கு கிடைக்க இருந்த சிலநூறு வாக்குகளுக்கும் ஆப்பு வைத்துள்ளது…