சென்னை:
திமுக அவைத்தலைவர் மதுசூதனன் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார்.

உடல்நலக்குறைவு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து மருத்துவர்கள் அவரை தீவிர சிகிச்சை கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.