ஜெ.பிறந்தநாள் பேரில் குமாரபாளையத்தில் அதிமுகவினர் வாக்கு வேட்டை

Must read

நாமக்கல்:
ஜெ.பிறந்தநாள் பேரில் குமாரபாளையத்தில் அதிமுகவினர் வாக்கு வேட்டை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்து தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த நிலையில் தற்பொழுது வீடு வீடாக சென்று பகல் நேரங்களில் டோக்கன் கொடுப்பதும் அந்த டோக்கனை கொண்டு வரும் பெண்களுக்கு தங்கள் வீடுகளில் வைத்து பட்டுசேலை வழங்கி வரும் அவல நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இது போல் இன்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட 3வது வார்டு பகுதியில் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணனின் தொழிற்சாலையில் வைத்து டோக்கன் கொண்டு வரும் பெண்களுக்கு விதிமுறைகளை மீறி இலவச பட்டு சேலைகள் வழங்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More articles

Latest article