சென்னை:
அதிமுக பாமக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடையும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்து உள்ளார்.
பல ஆண்டுகளாக அதிமுகவையும், மோடி அரசையும் கடுமையாக சாடி வந்த பாமக தலைவர் ராமதாஸ் அதே அதிமுக கட்சியுடன் தேர்தல் கூட்டணி அமைத்துள்ளார். 2 சீட்டு அதிகமாக கிடைத்த ஆசையில், திமுக காங்கிரஸ் இடையே கூட்டணி குறித்து பேசி வந்ததை முறித்துக்கொண்டு, அதிமுக கூட்டணி யில் ஐக்கியமாகி உள்ளார். இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், அதிமுக பாமக கூட்டணி குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாமக காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந் திருக்க வேண்டும்…. ஆனால், அது தனது கொள்கைக்கு எதிரான கூட்டணியில் சேர்ந்துள்ளது என விமர்சித்துள்ளார்.
அதுபோல தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா கூறும் போது, அதிமுக பாமக கூட்டணி 40 மக்களவைத் தொகுதிகளிலும் தோல்வி யடையும் என்றவர், இதுவரை அதிமுக, பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தவர் ராமதாஸ், இன்று அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளார், மக்களை பற்றி சிந்திக்காத சந்தர்ப்பவாத கூட்டணி என்றவர், இந்த அதிமுக-பாமக கூட்டணியை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று தெரிவித்து உள்ளார்.