சென்னை:
ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்கு வந்த அதிமுகவினர் கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழா, திரளான தொண்டர்கள் மத்தியில், இன்று நடைபெற்றது.
இந்தநிலையில் தற்போது நினைவிடப் பணிகள் முடிவடைந்து, பொதுமக்கள் பார்வையிடுவதற்காக இன்று காலை 11.15 மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மலர் வளையம் வைத்து, குனிந்து கும்பிட்டார். இதையடுத்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் மலர் தூவி கும்பிட்டார். அங்கு வைக்கப்பட்ட தீபத்தை தொட்டுக் கும்பிட்டார். முன்னதாக விழா கல்வெட்டை முதல்வர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர்.
இந்நிலையில், ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்கு வந்த அதிமுகவினர் கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.