சென்னை: கணக்கு கேட்டு ஆரம்பித்த அதிமுக கட்சி இப்போது தப்பு கணக்கு போடுகிறது  என அதிமுக உறுப்பினருக்கு  அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், உள்துறைஅமைச்சருடன் எடப்பாடி சந்திப்பு குறித்து விவாதங்கள் நடைபெற்றது. தமிழ்நாடு அரசியல் களத்தில் இந்த சந்திப்பு பேசும்பொருளாக மாறிய நிலையில்,   அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேசுகையில், அ.தி.மு.க. என்ற கட்சியே கணக்கு கேட்டதால் ஆரம்பிக்கப்பட்ட கட்சிதான். 2026-ல் முடிக்க வேண்டியவர்களின் கணக்கை முடித்து, எங்கள் கணக்கை தொடங்குவோம் என்று பேசினார்.

இதற்கு  பதிலடி கொடுத்த,  அமைச்சர் தங்கம் தென்னரசு, கணக்கு கேட்டு ஆரம்பித்த கட்சி தான் அ.தி.மு.க. அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை. ஆனால் இப்போது நீங்கள் (அதிமுக) தப்புக்கணக்கு போடுகிறீர்கள் என கூறினார்.

இதற்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எடப்பாடி பழனிசாமி போடக்கூடிய கணக்கு சரியாகத்தான் இருக்கும். கூட்டிக்கழித்து பார்த்தால் கணக்கு சரியாக இருக்கும் என்று கூறினார்.