சென்னை: தமிழக அமைச்சர்கள் நேரு, பொன்முடி, செந்தில் பாலாஜிமீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வலியுறுத்திய நிலையில், அதற்க சபாநயாகர் அனுமதி மறுத்ததால், எதிர்க்கட்ச தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக வெளிநடப்பு செய்தது.

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும், பெண்களை இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடி மீதும், நகராட்சி நிர்வாகத் துறை முறைகேடு தொடர்பாக அமைச்சர் கே.என் நேரு மீதும் அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. அதுபோல, பாஜக எம்எல்ஏ வானதி தரப்பில், 5 கவன ஈர்ப்பு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஆனால், ஆட்சியாளர்கள் மீதான தீர்மானங்கள் குறித்து விவாதிக்க அவைத்தலைவர் அப்பாவு மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் எதிர்க்கட்சிகள் அவையில் அமளியில் ஈடுபடுவதும், பின்னர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்வதும் தொடர்கதையாக உள்ளது.

நேற்று;ம (ஏப்ரல் 15ந்தேதி) அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, கே.என்.நேரு மற்றும் பொன்முடிக்கு எதிராக அ.தி.மு.க., நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அ.தி.மு.க., சார்பில் சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதப்பட்டதாகவும், ஆனால், ‘நாங்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது அவையில் விவாதம் நடத்த சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார்” என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டினார்.
இதைத்தொடர்ந்து, இன்று மீண்டும், அமைச்சர்கள் நேரு, பொன்முடி, செந்தில் பாலாஜிமீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமனா எடப்பாடி பழனிச்சாமி, அதுகுறித்து விவாதிக்க வலியுறுத்தினார். அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி, கே.என்.நேரு ஆகிய 3 அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளோம் என அதிமுகவினர் சபாநாயகரிடம் முறையீடு செய்தார்கள். இதற்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, “அரைமணி நேரத்திற்கு முன்னதாக கடிதம் கொடுத்தீர்கள், அது பரிசீலனையில் உள்ளது. நான் என்னுடைய முடிவை சொல்லவில்லை. ஏற்கனவே அலுவல் நிறைய இருக்கிறது அதனால் இன்று எடுக்க முடியாது” என்று தெரிவித்தார்.
சபாநாயகரின் பதிலால் அதிருப்தி அடைந்த அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.