டில்லி:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கடந்த இரண்டு நாட்களாக பாராளுமன்றத்தை அதிமுக உள்பட தமிழக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு முடக்கி உள்ள நிலையில, அதிமுக எம்.பி. நவநீத கிருஷ்ணனுடன் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு ஆலோசனை நடத்தி வருகிறார்.

உச்சநீதி மன்ற தீரப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு முயற்சி எடுக்காத நிலையிலும், காவிரி பிரச்சினை குறித்து பேச தமிழக  எம்.பி.க்களுக்கு அனுமதி அளிக்க மறுத்து வரும் நிலையில், அதிமுக உள்பட தமிழக எம்.பி.க்கள் நேற்றும், இன்றும் பாராளுமன்றத்தை முடக்கி வருகின்றனர்.

இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் மத்திய அரசுக்கு எதிராக தர்ணா போராட்டம் மற்றும், பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமளி காரணமாக,  அதிமுக மாநிலங்களவை குழு தலைவர் நவநீதகிருஷ்ணன் அழைத்து துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையாநாயுடு ஆலோசனை நடத்தி வருகிறார்.

மக்களவை துணைத்தலைவரும், அதிமுக எம்.பி.க்கள் குழு தலைவரான தம்பித்துரை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை பாராளுமன்றத்த நடத்த விடமாட்டோம் என்று மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்த நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு நவநீத கிருஷ்ணன் எம்.பி.யை சந்தித்து ஆலோசனை நடத்தி வருவது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.