சென்னை: கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள்   நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்  செய்யப்படுவ தாக சபாநாயகர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தொடர்  இன்று காலை தொடங்கியதும் அவையின் கேள்வி நேரத்தி  ஒத்தி வைத்து கள்ளக்குறிச்சி  கள்ளச்சாராய சாவு விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி அதிமுகவினர் சபாநாயகரின் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதை ஏற்க மறுத்த சபாநாயகர்,  கேள்வி நேரம் முடிந்த உடன் நேரம் தருகிறேன். வினாக்கள், விடைகள் நேரம் முடிந்து, நேரமில்லா நேரத்தில் பேச அனுமதி அளிக்கலாம் என்றார்.

அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஏற்கனவே அவையை ஒத்தி வைத்து, கள்ளக்குறிச்சி விவகாரம் விவாதிக்க வலியுறுத்தி தீர்மானம் கொடுக்கப்பட்டு உள்ளது என்று கூறினார். அதற்கு  சபாநாயகர் அப்பாவு,  அவையை ஒத்தி வைக்க கோரிய தீர்மானம் எனக்கு கிடைத்துவிட்டது என்றவர்,  ,  ஆளும் கட்சி கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல உங்களுக்கு விருப்பம் இல்லை என கூறினார்.

இதனால், அதிமுக உறுப்பினர்கள்  தொடர் அமளியில் ஈடுபட்டனர்.  கள்ளக்குறிச்சி  கள்ளச்சாராய சாவு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷமிட்டனர்.  இதையடுத்து,  அதிமுக உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

இதுகுறித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, அவர்களுக்கு விவாதத்தில் கலந்து கொள்ள  விருப்பம் இல்லை என்று கூறியதுடன்  அதிமுக உறுப்பினர்கள்   நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக  அறிவித்தார்.