சென்னை: தமிழக சட்டமன்ற சபாநாயகரின் ஒருதலைப்பட்சமாக நடவடிக்கையை கண்டித்து உண்ணாவிரதம் அறிவித்திருந்த எடப்பாடி பழனிச்சாமி இன்று வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதமம் இருக்க முற்பட்டார். அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சட்டசபையில் அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இந்த விஷயத்தில் சபாநாயகர், முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், ஓபிஎஸ்-க்கு சாதகமாக நடந்துகொள்வதாகவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக நேற்று சபையில் அமளி ஈடுபட்டதால், சபை நடவடிக்கையில் பங்கேற்க ஒருநாளை தடை விதிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி இன்று காலை சென்னை வள்ளுவர்கோட்டத்தில் போராட்டம் தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து சபாநாயகருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தடையை மீறி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். தடையை மீறி போராட்டம் நடத்தியதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்களை போலீசார் கைது செய்தனர். கைது நடவடிக்கையை கண்டித்து வள்ளுவர்கோட்டத்தில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.